Followers

மூணார் – கன்னிமலை பகுதிகளில் உலாவும் படையப்பா யானை: சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியம்

 மூணார் – கன்னிமலை பகுதிகளில் உலாவும் படையப்பா யானை: சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியம்



மூணார்:

மூணாரில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பிரபலமான ‘படையப்பா’ யானை மீண்டும் கன்னிமலை பகுதிகளில் சுற்றி திரிகிறது கன்னிமலை தேயிலை தோட்டங்கள் மற்றும் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் சுதந்திரமாக உலாவும் படையப்பா யானையின் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


மிகப்பெரிய உடல் அமைப்பும், வலிமையான தோற்றத்தும் கொண்ட படையப்பா யானை, மூணார் சுற்றுப்புறங்களில் அடிக்கடி தோன்றி மக்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறது. குறிப்பாக சுற்றுலாப் பயணிகள், இந்த யானையை காணும் தருணத்தை தங்கள் மொபைல் கேமராவில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.



வனத்துறை அதிகாரிகள், யானை காட்டுப்பகுதிகளில் சுதந்திரமாகச் சுழன்று வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் யானைக்கு அருகில் சென்று தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


நமது செய்தியாளர்: மூணார் மணிகண்டன்

Post a Comment

Previous Post Next Post