கல்லட்டி மலைப்பாதையில் காட்டு யானைகள் சாலை நடுவே நின்றதால் போக்குவரத்து பாதிப்பு வனத்துறை அறிவுறுத்தல்
நீலகிரி மாவட்டம் :
கல்லட்டி மலைப்பாதையில் காட்டு யானைகள் சாலையை சாலையில் நடுவே நின்றதால் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாயார் பகுதியில் இருந்து உதகைக்கு சென்ற அரசுப் பேருந்து கல்லட்டி மலைப்பாதையில் 27-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது, இரண்டு காட்டு யானைகள் சாலையின் நடுவே நடந்து வந்தன. இதைக் கண்ட பேருந்து ஓட்டுநர் உடனே பேருந்தை நிறுத்தினார்.
அந்த நேரத்தில், யானைகளில் ஒன்று பேருந்தை நோக்கி வந்து தலை ஆட்டியவாறு பேருந்தின் முன் நின்றது. சூழ்நிலையை சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை பின்னோக்கி இயக்கினார். சில நிமிடங்கள் அங்கு நின்ற யானை பின்னர் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்று விட்டது. அதன் பின்னர் பேருந்து உதகை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தது.
இந்த சம்பவம் அந்தப் பேருந்தில் பயணம் செய்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் தற்போது வைரலாகி வருகிறது
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் :
வனச்சாலைகளில் வனவிலங்குகள் சாலைகளை கடந்து மற்றொரு வனப்பகுதிக்குள் செல்வது வழக்கமான ஒன்றுதான் இந்த தருணங்களில் அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் வன விலங்குகள் சாலையை கடக்க உதவ வேண்டும் மற்றும் வனவிலங்குகள் துன்புறுத்தும் வகையில் வாகனங்கள் இயக்குவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர் வனத்துறையினர்
நமது செய்தியாளர் :கரன்சி சிவக்குமார்
