அதிரப்பள்ளியில் காயமடைந்த யானையின் நிலை கவலைக்கிடம்
திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி பகுதியில் காயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட காட்டு யானையின் உடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
சுமார் 15 வயது மதிக்கத்தக்க தாடையான், காலடி பிளாண்டேஷன் எட்டாம் பிளாக்கின் எருமத்தடம் பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு காயத்துடன் காணப்பட்டது. அப்போது வனத்துறை மயக்க ஊசி செலுத்தி சிகிச்சையளித்த பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவித்தது. தற்போது அந்த யானை குளிராந்தோடு மக்களின் குடியிருப்பு பகுதிக்கு அருகில் சோர்வாக அசைவின்றி காணப்பட்டுள்ளது
நேற்று முன்தினம் எர்ணாகுளம் உதவி வனத்துறை கால்நடை மருத்துவர் டாக்டர் பினோய் மற்றும் டாக்டர் ஓ.வி. மிதுன் தலைமையிலான மருத்துவக்குழு அந்த இடத்துக்கு சென்று யானையை பரிசோதனை செய்தனர் மேலும் உணவின் மூலம் மருந்தளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வனத்துறையினர் தெரிவிக்கின்றது
நமது செய்தியாளர் :விபின்


