Followers

அட்டப்பாடி அருகே நெற்றியில் காயத்துடன் மூன்று நாட்களாக பவானி ஆற்றில் நின்று கொண்டிருக்கும் காட்டு யானை

 அட்டப்பாடி அருகே நெற்றியில் காயத்துடன் மூன்று நாட்களாக பவானி ஆற்றில் நின்று கொண்டிருக்கும் காட்டு யானை



பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே உள்ள ஆனைகட்டி பகுதியில் பரிதாபகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.



ஆனைகட்டி அருகிலுள்ள கோட்டதுரை பகுதியில் பவானி ஆற்றில், நெற்றியில் ஆழமான காயத்துடன் ஒரு காட்டு யானை கடந்த மூன்று நாட்களாக நின்று கொண்டிருக்கிறது. யானை தொடர்ந்து ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


உடனடியாக அவர்கள் கேரளா வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை சென்றடைந்து, காயமடைந்த யானையின் நிலையை கண்காணித்து வருகின்றனர்.


யானைக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது

 மேலும் “யானைக்கு தற்போது மேல்சிகிச்சை தேவையெனில் உடனடியாக மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்கத்  தயாராக உள்ளனர் 


அப்பகுதி மக்கள் யானையின் உடல்நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ளனர். தற்போது வனத்துறை குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில்  ஈடுபட்டு வரைவது குறிப்பிடத்தக்கது 


நமது செய்தியாளர் :மன்னர்காடு Live

Post a Comment

Previous Post Next Post