விவசாய தோட்டம் கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடர்ந்த வன பகுதிக்குள் விடிவித்தனர் வனத்துறையினர்
திருப்பூர் மாவட்டம் :
உடுமலை அருகே உள்ள கொழுமம் வனச்சரக வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறி உள்ளது இந்த சிறுத்தை வனப்பகுதியை ஒட்டியுள்ள ஆண்டிப்பட்டி பகுதியில் பழனிச்சாமி என்பவர் விவசாய தோட்டத்திற்குள் புகுத்துள்ளது அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலியில் சிறுத்தை சிக்கி உள்ளது அதிலிருந்து வெளியில் வர முடியாமல் நீண்ட நேரம் போராடி உள்ளது.,
இதைக்கண்ட தோட்டத்து உரிமையாளர் பழனிச்சாமி உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது எடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர் சிறுத்தை கம்பி வேளையில் சிக்கி இருப்பதை உறுதி செய்யப்பட்டு உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டனர்.,
தகவலை அடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் உத்தரவின் பெயரில் கோவை கால்நடை மருத்துவர் வெண்ணிலா மற்றும் ஓய்வு மருத்துவர் மனோகரன் தலைமையில் சிறுத்தையை கண்காணித்து கம்பி வேலிகள் சிக்கியிருந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.,
பின்பு சிறுத்தையை மீட்டு பார்த்ததில் சிறுத்தையின் உடலில் சிறிய கீறல் காயங்கள் மட்டுமே இருந்த நிலையில் உடனடியாக சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் சிறுத்தை ஆரோக்கியமாக இருந்த நிலையில் கூண்டில் அடைக்கப்பட்டு சிறுத்தையை திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி வனச்சரகத்திற்கு கொண்டுவரப்பட்டு அடர்ந்த வனப் பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டனர்.,
மேலும் கூண்டில் இருந்து விடப்பட்ட சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.,
நமது செய்தியாளர் : பெஞ்சமின்


