Followers

வாழ்வின் அதிசயம்! :தும்பிக்கையில்லா குட்டியானை மீண்டும் ஆரோக்கியமாக தோட்டப்பகுதியில் சுற்றித்திரிந்த வீடியோ தற்போது வைரல்

 வாழ்வின் அதிசயம்! :தும்பிக்கையில்லா குட்டியானை மீண்டும் ஆரோக்கியமாக தோட்டப்பகுதியில் சுற்றித்திரிந்த வீடியோ தற்போது வைரல்




சாலக்குடி அருகே காலடி பிளாண்டேஷன் தோட்டப்பகுதியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தும்பிக்கையில்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட குட்டியானை, இப்போது தாயானையுடன் சேர்ந்து ஆரோக்கியமாக மீண்டும் தோன்றியுள்ளது.



தாயானையுடன் தோட்டப்பகுதியில் குதூகலமாகச் சுற்றித்திரியும் இந்த குட்டியானை, எண்ணெய் பனை நாரை மென்று சாப்பிடவும், ஆற்றின் ஆழம் குறைந்த பகுதியில் தாயுடன் நின்று தண்ணீர் குடிக்கவும் பழகியுள்ளது. தாயின் அருகில் விளையாடி மகிழும் காட்சி வன அதிகாரிகளையும், உள்ளூர் மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏழாற்றுமுகம் பகுதியில் தும்பிக்கையில்லாமல் கண்டபோது, அதன் எதிர்காலம் குறித்து வனவிலங்கு நேசிகளும், உள்ளூர் மக்களும் பெரும் கவலையில் ஆழ்ந்திருந்தனர்.

தும்பிக்கையில்லாததால் உணவு எடுக்கவோ, தண்ணீர் குடிக்கவோ முடியாது என அனைவரும் அச்சப்பட்டனர்.



ஆனால் தாயானையும் கூட்டத்தில் உள்ள மற்ற யானைகளும் அந்த குட்டியை புறக்கணிக்காமல் அன்புடன் சேர்த்துக் காத்தன. தாயானையின் வழிகாட்டுதலால் குட்டியானை தன்னால் உணவு எடுக்கவும், தண்ணீர் குடிக்கவும் கற்றுக்கொண்டது. தாயின் அன்பும், கூட்டத்தின் ஆதரவும் காரணமாக, தன் குறைபாட்டை மீறி இப்போது ஆரோக்கியமாகக் வனப்பகுதியில் வாழ்கிறது.


பொதுவாக குறைபாடு அல்லது நோயுடன் இருக்கும் யானைகளை கூட்டத்திலிருந்து பிரித்து விடுவது இயல்பான ஒன்று. ஆனால் இந்த யானைக் கூட்டம் அந்த தும்பிக்கையில்லா குட்டியை தாயுடன் சேர்த்து காப்பது வனத்துறையினரின் கூற்றுப்படி “அரிதானதும், உணர்ச்சி ஊட்டுமுமான” நிகழ்வாகும்.


இயற்கையின் அற்புதம், தாயின் அரவணைப்பு, மற்றும் வனவிலங்குகளின் தன்னம்பிக்கை —

இந்த தும்பிக்கையில்லா குட்டியானை மூன்றையும் ஒருங்கிணைந்து பிரதிபலிக்கிறது. 

நமது செய்தியாளர் :வடிவேல்

Post a Comment

Previous Post Next Post